முகப்பு
தமிழ்நாடு

ஆண்டாள் கோவிலில் விஜயகாந்த் ஷைஸ்ராநாம அர்ச்சனை: 1 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இயலாமல் அவதி

ஆண்டாள் கோவில் மூலஸ்தானத்தின் முன்பு அமர்ந்து 1 மணி நேரம் விஜயகாந்த் ஷைஸ்ராநாம அர்ச்சனை செய்ததால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்ய இயலாமல் திரும்பிச் சென்றனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

ஆண்டாள் கோவில் மூலஸ்தானத்தின் முன்பு அமர்ந்து 1 மணி நேரம் விஜயகாந்த் ஷைஸ்ராநாம அர்ச்சனை செய்ததால், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்ய இயலாமல் திரும்பிச் சென்றனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன், செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

நேரடியாக மூலஸ்தானம் சென்ற அவர் 10 நிமிடங்கள் நின்றவாறே சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவரும் பிரேமலதாவும் மூலஸ்தானம் முன்பு அமர்ந்து, ஸ்ரீஆண்டாளுக்கு பிடித்த 1008 தாமரை, அரக்கு புடவை, கற்கண்டு சாதத்துடன் ஷைஸ்ராநாம அர்ச்சனை செய்தனர். சுமார் 55 நிமிடங்கள் இந்த அர்ச்சனை நடைபெற்றது. வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டின் அழைப்பிதழ் இடையே கொண்டு வரப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஒரு பெரிய கவர் சுவாமி முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்தக் கவரில் வேட்பாளர் பட்டியல் உள்ளது என்றும் பொதுவாக கட்சியினர் அங்கு பேசிக் கொண்டனர்.

பூஜை நடைபெற்றுக் கொண்டுருந்த நேரத்தில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ஆனால் விஜயகாந்த் மூலஸ்தானத்தின் முன்பு அமர்ந்திருந்ததாலும், அவரைச் சுற்றி ஏராளமான கட்சியினர் சூழ்ந்திருந்ததாலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இயலாமல் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து சுவாமி தரிசனம் செய்ய வந்த உள்ளூர் பக்தர்கள் கூறுகையில், பொதுவாக ஷைஸ்ராநாம அர்ச்னை கொடிமரத்தின் அருகேயுள்ள கெஜலட்சுமி கோவில் முன்பு யாருக்கும் இடையூறு இன்றி நடைபெறும். ஆனால் நடிகர் என்பதால் கோவில் நிர்வாகம் இதுபோன்று அனுமதித்துள்ளது என்று கூறினர்.

பின்னர் விஜயகாந்த் தங்க கோபுரம், வடபத்தர சயனர் கோவில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்தார். செய்தியாளர்களை சந்திப்பதை முழுவதுமாக தவிர்த்துவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →