முகப்பு
தமிழ்நாடு

போக்குவரத்துக் காவலருக்கு பணியின்போது குளிர்பானம் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு

போக்குவரத்துக் காவலருக்கு பணியின்போது குளிர்பானம் வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில், போக்குவரத்துக் காவலராக பணிபுரிபவர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக தமிழக முதல்வரின் உத்தரவுப்படி குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆர்.சி. தேவாலய சந்திப்பு அருகே போக்குவரத்துக் காவலருக்கு மோர் மற்றும் எலுமிச்சம்பழம் சாறு உள்ளிட்டவற்றை வழங்கி நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு காவலர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. போக்குவரத்துக் காவலர்களுக்கு பணியின்போது இரு மணி நேரங்களுக்கு ஒரு முறை என ஒரு நாளைக்கு நான்குமுறை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மோர் அல்லது எலுமிச்சம்பழச் சாறு வழங்கப்படுகிறது. இது தொடர்ந்து கோடை காலம் முடியும் வரை 4 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →