திருச்சி விமான நிலையத்தில் 2 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: ஒருவர் கைது
திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு நேற்று நள்ளிரவு புறப்பட இருந்த விமானத்தில் வழக்கம் போல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சோதனையில் இராமநாதபுரம், கீழக்கரையை சேர்ந்த முகமது பாஸ்கல் ஹக் என்பவரிடம் போதைப் பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, நீதம் தேதம்பைன் என்ற பெயர் கொண்ட 4 கிலோ போதைப் பொருளை அவரிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.4 கோடி ஆகும்.
இதுகுறித்து முகமது பாஸ்கலை கைது செய்து, வழக்கு பதிந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.