லால்குடி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மதுபாட்டிலில் குத்திக் கொலை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் உள்ள ஆரோக்கியபுரம் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மதுபாட்டிலில் குத்திக் கொலை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சடலமாக கிடந்துள்ளார்.
லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் உள்ள ஆரோக்கியபுரம் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மதுபாட்டிலில் குத்திக் கொலை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சடலமாக கிடந்துள்ளார்.
லால்குடி அருகேயுள்ள கல்லக்குடி பகுதியினைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகன் ராமமூர்த்தி. 40 வயதுடைய இவர் லால்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ராமமூர்த்தி போட்டோ வீடியோ கடையினை கல்லக்குடி பகுதியில் வைத்துள்ளார். மேலும் அங்குள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்ததாரராக உள்ளார். இகு மட்டும்மல்லாது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் வியாழக்கிழமை தனது நண்பர்களுடன் ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள தனியார் சுண்ணாம்பு கல் குவாரி பகுதியில் மது அருந்துள்ளார். அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராமமூர்த்தியினை நண்பர் குத்தி கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகைகளையும் திருடி விட்டுத் தப்பியோடினர்.
இது குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீஸôர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஆனால் ராமமூர்த்தி உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யாவிடில் சடலத்தை வாங்க முடியதென்கின்றனர்.