முகப்பு
தமிழ்நாடு

என்.எல்.சி தொழிற்சங்க தேர்தல்: நாளை மாலை 5 மணிக்கு பிரச்சாரம் முடிவு

நெய்வேலி, என்.எல்.சி-ல் நடைபெறும் தொழிற்சங்கம் தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தலுக்கான பிரச்சாரம் புதன்கிழமை (நாளை) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:30 PM
பகிர்:

நெய்வேலி, என்.எல்.சி-ல் நடைபெறும் தொழிற்சங்கம் தேர்வுக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தலுக்கான பிரச்சாரம் புதன்கிழமை (நாளை) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

என்.எல்.சி தொழிலாளர்களின் கோரிóக்கை தொடர்பாக என்.எல்.சி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை ரகசிய வாக்கெடுப்பு எடுத்து தேர்வு செய்வது வழக்கம்.

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக செயல்பட்டு வந்த தொமுச, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் அங்கீகாரம் 2016 ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து புதிய அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு 17-ஆம் தேதி நடக்கவுள்ளது.

இத்தேர்தலில் 6 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. போட்டியிடும் தொழிற்சங்க நிர்வாகிகள், ஆதரவாளர்கள் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

புதன்கிழமை (நாளை) மாலை 5 மணிக்குள் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →