முகப்பு
தமிழ்நாடு

சென்டாக் சேர்க்கை தர வரிசைப் பட்டியல்: முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார்

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல், பாடப்பிரிவுகளுக்கான சென்டாக் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை முதல்வர் வி.நாராயணசாமி, சுகாதார அமைச்சர்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:32 PM
பகிர்:

: புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல்,  பாடப்பிரிவுகளுக்கான சென்டாக் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை முதல்வர் வி.நாராயணசாமி, சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.

உயிரியல் பாடப்பிரிவுகள் (எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட), பி.டெக்., பி.பார்ம், பி.ஏ. எல்எல்பி போன்றவற்றுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இதற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுப் பேசிய முதல்வர் நாராயணசாமி, சென்டாக் மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் ஆன்லைன் மூலம் 11176 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் கோவா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 10080 அசல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் இருந்து பெறப்பட்டவை 6827 விண்ணப்பங்கள் ஆகும்.

இதில் உயிரியல் பாடப்பிரிவுகள் (எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட)-க்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 4502 ஆகும். இதில் தகுதியானவை 4391 ஆகும். நிராகரிக்கப்பட்டவை 118 ஆகும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.