கடலூர் தேமுதிக அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடலூரில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக இடையே தேர்தல் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடலூரில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தேமுதிக ஒன்றிய செயலர் ஜி.ராயல் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நகர செயலர் ஏ.ஜி.தஷ்ணா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.ஜெயசங்கர், மாவட்ட கேப்டன் மன்ற செயலர் ஏ.லெனின், நகர தலைவர் வி.சி.சரவணன், துணைசெயலர் எம்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதிமுக நகர செயலர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த், ரமேஷ், தமிழ்மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஜெயசீலன், செந்தில், ஸ்ரீதர், பிரதீப், அலக்ஸ் உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.