காஞ்சிபுரம்: நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி
காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே ஸ்டேஷ்னரி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அவ்வழியாக வந்த கார், லாரி மீது மோதியதில், காரில் வந்த 3 பேர் பலியாகினர்.
Advertisement
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மிகவும் இருட்டான பகுதியில், எந்த சமிக்ஞையும் இல்லாமல் லாரி நிறுத்தப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறினர்.