தமிழ்நாடு

ஆம்பூர் தொகுதி : அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்ரமணி வெற்றி

ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்ரமணி 28,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

எம். அருண்குமார்

ஆம்பூர் :  ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்ரமணி 28,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆம்பூர் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டன.   மொத்தம் 18 சுற்றுகள் வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டன.  காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப் பெட்டி திறக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கப்பட்டது.  

ஆம்பூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,61,179.  இதில் பதிவான தபால் வாக்குகள் 734 ஆகும்.  அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி 79,182 வாக்குகளும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வி.ஆர். நசீர் அஹமத் 51,176 வாக்குகளும் பெற்றனர்.

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை நோட்டாவிற்கு 1632 வாக்குகள் பதிவாகியுள்ளது.   பதிவான தபால் வாக்குகளில் 104 வாக்குகள் செல்லாதவை.  

வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி முன்னிலையில் இருந்து வந்தார்.  18 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 28,006 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வி.ஆர். நசீர் அஹமத் தவிர மற்ற தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட 13 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆம்பூர் தேர்தல் பார்வையாளர் (பொது) கலேந்திர மோச்சாரி முன்னிலையில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  கொ. கந்தசாமி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT