முகப்பு
தமிழ்நாடு

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சரிடம் திமுக மனு

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக மத்திய அரசின் புதிய கல்விகொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர்ப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம்... 

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

சென்னை: இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக மத்திய அரசின் புதிய கல்விகொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர்ப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் திமுக மனு அளித்துள்ளது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி இன்று அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2009 கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசிய கல்விக் கொள்கை 2016 அமைந்துள்ளது. 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பது 5-ம் வகுப்பு வரை என குறைக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்புக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு முறை தோல்வி அடைந்தால் படிப்பை தொடர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது பாரம்பரியமான குலக் கல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியாகும்.

பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதத்தை கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை தமிழகம் பின்பற்றி வருகிறது. எனவே, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

10-ம் வகுப்பு இரண்டு வகையான தேர்வு நடத்தப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இது மாணவர்களை பிளவுபடுத்தும் முயற்சியாகும். இதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்கள் மேல் படிப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இட ஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தைகூட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

கல்வித் துறையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் பல்கலைக்கழக மானியக்குழு (உயர் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி உரிமைச் சட்டம் விரிவுப்படுத்தப்படும் என்பது சிறுபான்மையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் பல்வேறு தரப்பு மக்களிடம் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய கல்விக் கொள்கையை திமுக உறுதியுடன் எதிர்க்கிறது''

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →