தூத்துக்குடியில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: 6 பேர் கைது
தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான 6 பேர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி: தூத்துக்குடி பாலவிநாயகர் கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான 6 பேர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
தூத்துக்குடியில் உள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, துணைக் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், ஆய்வாளர் கமலி ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.
அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் கிங்ஸ்டன், தீபன் புஷ்பராஜன், ராமகிருஷ்ணன், இசைக்கிராஜா, சாம் அருள்ராஜ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ கேட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 2 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர்.