முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி: சாலைத் தடுப்பில் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் இருவர் பலி 

தூத்துக்குடியில் சாலைத் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:


தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாலைத் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் தெலங்கானாவைச் சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் பலியாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சேத்துப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் 2 கார்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்தனர். கடந்த 24 ம் தேதி தெலங்கானாவில் இருந்து இவர்கள் கிளம்பியுள்ளனர்.

சபரிமலை ஐயப்பனை தரிசித்துவிட்டு திரும்பிய இவர்கள்,  கன்னியாகுமரி சென்றுவிட்டு ராமேஸ்வரம் வரும் வழியில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு தூத்துக்குடியில் ஒரு கார் விபத்தில் சிக்கியது. இந்த காரில் 5 இருந்தனர்.

சுங்கச்சாவடி அருகே சாலைத் தடுப்பு மீது கார் மோதிக் கவிழ்ந்தது. இந்த காரில் இருந்த விஸ்வம் பாபு (45) ரவீந்திரன் (37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காரில் இருந்த ராமு , மணி, சாய் ஆகியோர் காயம் அடைந்து தூத்துக்குடி ஜி.எச்சில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.