தமிழ்நாடு

சென்னை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட திமுக கவுன்சிலர் !

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையில் திமுக கவுன்சிலர் தனசேகரன் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

DIN

சென்னை: தாம்பரம் அருகே உள்ள படப்பையில் திமுக கவுன்சிலர் தனசேகரன் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தாம்பரம் அருகே படப்பையில் கவுன்சிலராக இருப்பவர் தனசேகரன். அவர் இன்று காலை அங்குள்ள ஒரு சர்ச்சிற்கு சென்றுள்ளார். அப்போது 'திடீரென்று' சர்ச்சிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தனசேகரனை சரமாரியாக வெட்டி படுகொலை கொலை செய்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரார்த்தனை செய்வதற்காக சர்ச்சில் கூட்டம் திரண்டிருந்தது. அவர்களுக்கு மத்தியில் நடந்த இந்தக் கொலை அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

நடைபெற  இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்காக நாளை தனசேகரன் மனுத்தாக்கல்  செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை   உண்டாக்கியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மோந்தா’ புயல்: ராஜஸ்தானிலும் மிக கனமழை!

ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடுவதில் எந்த மாற்றமும் இருக்காது: மிட்செல் மார்ஷ்

ராணுவப் பள்ளியாக மாறிய பிக் பாஸ் வீடு: அதிரடி காட்டும் இந்த வார கேப்டன்!

மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல்!

ஜார்க்கண்டில் வெடிகுண்டு தாக்குதலில் சிறுமி பலி!

SCROLL FOR NEXT