மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நெய்வேலி வருகை
நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்று பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை வருகை தந்தார்.
பண்ருட்டி: நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்று பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை வருகை தந்தார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 12.30 மணியளவில் நெய்வேலி விமானத்தளத்திற்கு வந்த அவரை என்.எல்.சி நிறுவன தலைவர் சரத்குமார் ஆச்சாரியா மற்றும் இயக்குனர்கள் வரவேற்றனர்.
அங்கிருந்து புறப்பட்ட அவர் நெய்வேலியில் உள்ள நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களை அவர் பார்வையிட்டார்.