தமிழ்நாடு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ' முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.மருத்துவக்குழுவினர் முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நோய்  எதிர்ப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்  அளிக்கப்பட்டு வருகிறது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வந்திருக்கும் மருத்துவர்கள், இங்கு சிகிசிச்சை வழங்கி வரும்  

மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர் எனவும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வும் அந்த அறிகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT