சட்டவிரோத கிரானைட் வெட்டியெடுப்பு: அரசுக்கு ரூ.14 கோடியே 30 லட்சம் இழப்பு
மேலூர்: திருவாதவூர், கீழவளவு பகுதிகளில் பொதுப்பணித்துறை கால்வாய், கண்மாய்களை ஆக்கிரமித்து சேதப்படுத்தி கிரானைட் கற்களை வெட்டியெடுத்த 3 கிரானைட் நிறுவனங்களால் அரசுக்கு ரூ.14.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக 758 பக்கம் குற்றப் பத்திரிக்கையை போலீஸார் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர், திருவாதவூர், கீழவளவு பகுதிகளில் அரசு புறம்போக்கு, பொதுப்பணித்துறை கண்மாய்கள், கால்வாய்கள் மற்றும் கனிமவள நிறுவன பாறைகளையும் சில கிரானைட் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளது. இந்நிறுவனங்களால் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த சகாயம் தலைமையிலான விசாரணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸôர் சம்பந்தப்பட்ட கிரானைட் நிறுவனங்கள் மீது 98 குற்றவழக்குகள் பதிவுசெய்துள்ளனர். இதில் ஏற்கெனவே 45 வழக்குகளில் குற்றப்பத்திரிக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் 3 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை கிரானைட் வழக்குகளுக்கான சிறப்பு வழக்குரைஞர் ஷீலா, தனிப்படை போலீஸ் ஆய்வாளர்கள் ராஜாசிங், பிரகாஷ் ஆகியோர் தாக்கல்செய்தனர்.
மேலூர் குமார் கிரானைட்ஸ்:
ராஜாக்கூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கால்வாயை சேதப்படுத்தி கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததாக மேலூரை சேர்ந்த குமார் கிரானைட் நிறுவனத்தை சேர்ந்த பெரியகருப்பன், பாலகிருஷ்ணன் இவரது மகன் அருண் உள்ளிட்ட 20 பேர்மீது ஒத்தக்கடை போலீஸôர் வழக்குத்தொடர்ந்திருனர். இதனால் அரசுக்கு ரூ.15.56 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக 551 பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வங்கிமூலம் நடைபெற்ற பணபரிவர்த்தனை, பாறைகளை உடைக்க வெடிபொருள் கொள்முதல்செய்தது, பணம்கொடுத்தற்கான ஆவணங்கள், தூத்துக்குடி போர்ட்மூலம் வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்களை கடத்தியது தொடர்பான ஆவணங் ஆதாரங்களையும் சேர்த்து தாக்கல் செய்துள்ளனர்.
பி.ஆர்.பி. கிரானைட்ஸ்:
தெற்காமூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கால்வாய்களை சேதப்படுத்தி கிரானைட் கற்களை பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் வெட்டியெடுத்ததில் அரசுக்கு ரூ.5 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிவுசெய்திருந்தனர். இதில் பி.பழனிச்சாமி அவரது மனைவி மகன்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 20 பேர்மீது 37 பக்கத்திலான குற்றப்பத்திரிóகையை தாக்கல்செய்துள்ளனர்.
ஓம்ஸ்ரீ கிரானைட்ஸ்:
கீழவளவு கிராமத்திலுள்ள கட்டழகன் கண்மாயை ஆக்கிரமித்து சேதப்படுத்தி கிரானைட் கற்களை வெட்டியதில் அரசுக்கு ரூ.76 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓம்ஸ்ரீகிரானைட் நிறுவனத்தை சேர்ந்த ஷைலஜாரெட்டி உள்ளிட்ட 14 பேர்மீது 170 பக்கத்திலான குற்றப்பத்திரிக்கை போலீஸôர் தாக்கல்செய்துள்ளனர்.