முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் சென்னை காவல்துறை ஆணையராகிறார் ஜார்ஜ்!

சென்னை காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு

மீண்டும் சென்னை காவல்துறை ஆணையராகிறார் ஜார்ஜ்!

சென்னை காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

சென்னை காவல்துறை ஆணையராக எஸ்.ஜார்ஜ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறை தலைவர் (டி.ஜி.பி) பதவியில் இருந்த அசோக் குமார் நேற்று இரவு 'திடீர்' என்று விருப்ப ஓய்வில் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் புதிய டி.ஜி.பி யாக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து   சென்னையின் புதிய காவல்துறை ஆணையர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராக பணியாற்றி வந்த ஜார்ஜை காவல்துறை ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவர் முன்பே சென்னை காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →