தமிழ்நாடு

கோடை வெப்பம்: அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி ஆகியவற்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

அரசுப் பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் இரு பருவங்களிலும் மழை பொய்த்ததால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு எழுந்துள்ளது. எனினும், இவ்விரு அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஞாயிற்றுக்கிழமை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT