முகப்பு
தமிழ்நாடு

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்: புழல் சிறையில் அடைப்பு!

புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் ...

Updated On : 3 ஏப்ரல், 2017 at 3:52 PM
பகிர்:

சென்னை: புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பபித்துள்ளது.

2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிமன்றத்தில் வைகோ நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் தான் பிணையில் செல்ல விரும்பவில்லை என்று அவர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.