முகப்பு
தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி அவசர ஆலோசனை

தமிழக அமைச்சர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கும் நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:14 PM
பகிர்:


சென்னை: தமிழக அமைச்சர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடக்கும் நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்துக்கு வந்த சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரர், இன்று நண்பகலில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஏற்கனவே, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் புகார் அளித்துள்ள நிலையில், இன்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில்  சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது முக்கியத்துவம் பெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →