தமிழ்நாடு

ஆர்.கே. நகர் தேர்தலை தள்ளி வைக்கவோ, நிறுத்தவோ சாத்தியமில்லை: இல.கணேசன் எம்.பி

தேர்தலை தள்ளி வைக்கவோ, நிறுத்தவோ சாத்தியமில்லை என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

DIN

மதுரை: ஆர்.கே. நகர் தேர்தலை தள்ளி வைக்கவோ, நிறுத்தவோ சாத்தியமில்லை என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி பாஜக கட்சி தொடங்கிய நாள். இதையொட்டி மாவட்ட வாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க நான் செல்கிறேன்.

தருண்விஜய் எம்.பி. தென்னிந்தியர்கள் குறித்து கூறிய சர்ச்சை கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். தேர்தலை தள்ளி வைக்கவோ, நிறுத்தவோ சாத்தியமில்லை.

தமிழகத்தில் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் எங்கும் சோதனை நடத்த அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே இதில் அரசியல் தலையீடு இல்லை.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸில் மீண்டும் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.!

“தினமணி Save Lives!” துணை குடியரசுத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

விஜய் ஹசாரே வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தும் இந்திய அணியில் புறக்கணிப்பு!

துரந்தர் படக்குழுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்வு! மாலை நிலவரம்...

SCROLL FOR NEXT