தமிழ்நாடு

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக உத்தரவு

தினமணி

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அப்லிங்க் சாதனங்களை இறக்குமதி செய்ததில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ம் ஆண்டில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதேபோல வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம் இந்தியன் வங்கியில் இருந்து, 3 கோடி ரூபாய் கடன் பெற்றது.

இதில் 2.20 கோடி ரூபாயை கொடநாடு எஸ்டேட் வாங்க சசிகலா பயன்படுத்தியதாகவும், இதில் அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாகவும் தினகரன்,சசிகலா மீது அமலாகத்துறை வழக்குப் பதிவு செய்தது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு விசாரணை, எழும்பூர் சென்னை இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் மீண்டும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்று வந்தது. 

அப்போது டிடிவி தினகரன், வரும் 18, 19 ஆகிய தேதிகளில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT