திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாமக, தேமுதிக பங்கேற்கவில்லை
திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக, தேமுதிக, மதிமுக கட்சிகள் பங்கேற்கவில்லை.
சென்னை: திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக, தேமுதிக, மதிமுக கட்சிகள் பங்கேற்கவில்லை.
விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
Advertisement
இந்த அழைப்பை ஏற்று திமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளும் பங்கேற்றன.