அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இது குறித்த விவரம்: ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்தப் புகார் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்
துறையினர் சோதனை செய்து ரூ.5 கோடியும், ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விஜயபாஸ்கரிடம் ஏற்கனவே வருமான வரித் துறையினர் கடந்த 10-ஆம் தேதி விசாரணை செய்தனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவணங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டனர்.
சுமார் ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர், விஜயபாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். வருமான வரித் துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆஜரானதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையினர், மேலும் சிலரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.