தமிழ்நாடு

சென்னைக்கு வாங்க: ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு  முதல்வர் அழைப்பு

DIN

சென்னை: தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் குடுக்க முயற்சித்த வழக்கில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு நாளை தில்லி காவல் துறையினர் சம்மன் குடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னைக்கு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பலில் பயணிக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி தலைமையகத்தில் இருந்து தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்றும் சென்னை வரும் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியல் சூழல் பற்றி சிறப்பு ஆலோசனை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT