தமிழ்நாடு

டிடிவி தினகரன் வழக்கறிஞருடன் ஆலோசனை

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

தினமணி

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

அதிமுகவுக்குரிய 'இரட்டை இலை' தேர்தல் சின்னத்தை வி.கே.சசிகலா தலைமைக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர இடைத்தரகராக செயல்பட முயன்றதாக, தில்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் சசிகலா தலைமைக்கு சாதகமாக செயல்பட அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மூலம் ரூ.1.30 கோடி தனக்கு வந்ததாக சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு எதிராக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு காவல் துறை குழு ஓரிரு தினங்களில் சென்னைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது இல்லத்தில் வழக்கறிஞருடன் ஆலோனையில் ஈடுபட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அகழாய்வு தளத்தைப் பார்வையிட்ட முதல்வர் Stalin!

பூண்டி வெள்ளியங்கிரி கோயிலில் பக்தர்களை அலறவிட்ட ஒற்றை யானை!

விஜய் அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மல்லிகார்ஜுன கார்கே!

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

SCROLL FOR NEXT