முகப்பு
தமிழ்நாடு

தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏ-க்கள் எத்தனை பேர்?

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:19 PM
பகிர்:

சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த அமைச்சரவையும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி விட முடிவு செய்து, தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் நாளைக்கே பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகிறோம். கட்டுக்கோப்புடன் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு கட்சியையும், ஆட்சியையும் நிலை நிறுத்துவோம். ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஏற்கெனவே சொல்லி விட்டோம். எங்கு, எப்போது பேச்சுவார்த்தை என்பதை எங்கள் தரப்பில் அமைக்கப்படும் குழு கூடி முடிவு செய்யும். இது அதிமுகவில் உள்ள அடிமட்டத் தொண்டர்களின் கருத்தாகும். வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவிட்டு கட்சி, ஆட்சியை வழிநடத்துவோம் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், கட்சியின் அதிகார மையம் என கருதப்படும் தினகரன் பக்கம் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் செல்ல உள்ளனர் என்பது முழுமையாக தெரியவில்லை.

இதுவரை டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 8 எம்.எல்.ஏ-க்கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அமைச்சர் தங்கதமிழ்ச்செல்வன் (ஆண்டிபட்டி),  ஜக்கையன் (கம்பம்), செல்வமோகன் தாஸ் (தென்காசி), கதிர்காமு (பெரியகுளம்), சுப்பிரமணி (சாத்துார்), வெற்றிவேல் (பெரம்பூர்), ஏழுமலை (பூந்தமல்லி), சின்னத்தம்பி (ஆத்தூர்) மற்றும் கருணாஸ் (திருவாடனை) உள்ளிட்ட 9 பேர் மட்டுமே அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் டில்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தினகரனுக்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால், வி.கே.சசிகலா-டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் 50-க்கும் அதிகமான பேரவை உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சியில் கெட்டபெயருக்கு தினகரன் குடும்பமே காரணம். தினகரன் குடும்பத்தினருடன் தொடர்பை முழுமையாக துண்டிக்க வேண்டும் என்று அமைச்சர்களின் ஆலோசனைக்குப் பிறகு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியையும் கட்சியையும் நடத்த குழு அமைக்கப் போவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில், டிடிவி தினகரனுக்கு எத்தனை பேரவை உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →