முகப்பு
தமிழ்நாடு

சேலம், ஈரோட்டில் பரவலாக மழை: சென்னைக்கு வெப்பம், வெப்பம் மட்டுமே :(

வெகு நாட்களுக்குப் பிறகு தென் தமிழகத்தின் சேலம், ஈரோடு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

Updated On : 24 ஏப்ரல், 2017 at 11:52 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:52 PM


சென்னை: வெகு நாட்களுக்குப் பிறகு தென் தமிழகத்தின் சேலம், ஈரோடு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

மழை மற்றும் சென்னையின் வெப்பம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, தென்தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Advertisement

ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட மக்களின் கனவு நாள் என்றே நேற்றைய தினத்தை சொல்ல வேண்டும். இவ்விரு மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது என்று நேற்றைய தினம் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் சிலர், சென்னையில் மழை பெய்யுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு நோ என்றும், சென்னையில் வெப்பம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று மதியம் லேசான மழை பெய்துள்ளது. நாகர்கோயிலுக்கும் மழை வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. திருத்தணியில் நேற்று மேக மூட்டம் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.