கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பு : பெரம்பூர் தனியார் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பெரம்பூரை சேர்ந்த ...
தமிழ்நாடுகூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பு : பெரம்பூர் தனியார் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பெரம்பூரை சேர்ந்த ...
சென்னை: மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பெரம்பூரை சேர்ந்த டான் போஸ்கோ பள்ளிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை அடுத்துள்ள பெரம்பூரில் இயங்கி வருகிறது டான் போஸ்கோ பள்ளி. இங்கு மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கபடுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கூடுதல் கல்வி கட்டண வசூலிப்புக்கு தடை விதிக்குமாறு பெற்றோர்கள் சிலர் ஒன்று சேந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டான் போஸ்கோ பள்ளி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை ஜுன் மாதம் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.