'நீட்' தேர்வு மாணவர் அனுமதி விவகாரம்: சி.பி.எஸ்.இ இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
தொழில் நுட்ப கோளாறால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் ...
தமிழ்நாடு'நீட்' தேர்வு மாணவர் அனுமதி விவகாரம்: சி.பி.எஸ்.இ இயக்குனருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
தொழில் நுட்ப கோளாறால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் ...
சென்னை: தொழில் நுட்ப கோளாறால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிடில், நீதிமன்றத்தில் ஆஜாராகும்படி உத்தரவிட நேரும் என்று சி.பி.எஸ்.இ இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையானது ;நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் மூலமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த தேர்வுகளை மத்திய கல்வி வாரியமான சி .பி.எஸ்.இ நடத்தும் என்றும் அறிவித்தது.
அதன் அடிப்படையில் தேர்வுக்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ தளத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வுக்கு சரியான நேரத்தில் விண்ணப்பிக்க இயலவில்லையென்றும்,.இதன் காரணமாக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே தாமதமாக விண்ணப்படித்த தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் 38 மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை நேற்று கேட்டநீதிபதி புஷ்பா இன்று தனது உத்தரவை பிறப்பித்தார். அதில் தொழில் நுட்ப கோளாறால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தாமதமான மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றாவிடில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகும்படி உத்தரவிட நேரும் என்றும் சி.பி.எஸ்.இ இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.