தமிழ்நாடு

விவசாயிகள் பிரச்சினையில் திமுக நீலிக்கண்ணீர்: வைகோ கடும் தாக்கு!

வறட்சி நிவாரணம்  ,கடன் தள்ளுபடி உள்ளிட்ட காரணங்களால் போராடி வரும் விவசாயிகள் பிரச்சினையில் அதிக அக்கறை இருப்பது போல திமுக ...

DIN

சென்னை: வறட்சி நிவாரணம்  ,கடன் தள்ளுபடி உள்ளிட்ட காரணங்களால் போராடி வரும் விவசாயிகள் பிரச்சினையில் அதிக அக்கறை இருப்பது போல திமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் பெறுவதற்கு வைகோ மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வைகோ, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றக் காவல் முடிந்ததால், எழும்பூர் 13-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வைகோ கடந்த 17-ஆம் தேதி  திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதித் துறை நடுவர் (பொறுப்பு) கோபிநாத், வைகோவின் நீதிமன்றக் காவலை ஏப்.27-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்தார். அத்துடன் வழக்கின் விசாரணையை முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.      

அதன்படி காவல் நீட்டிப்புக்காக எழும்பூர் 5-ஆவது முதன்மை அமர்வின் முன்பாக வைகோ இன்று ஆஜர் படுத்தப்பட்டார். அவரது காவலை ஜுன்-2ஆம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது வைகோ கூறியதாவது:

வறட்சி நிவாரணம்  ,கடன் தள்ளுபடி உள்ளிட்ட காரணங்களால் தில்லியில் கடந்த 40-நாட்களுக்கும்மேலாக தமிழக விவசாயிகள் போராடி வந்தனர்.ஆனால் அவர்களை பிரதமர் மோடி கடைசி வரை நேரில் சென்று சந்திக்கவே இல்லை.  

மத்தியில் தங்கள் ஆட்சியில் இருந்த பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த வித முயற்சியும் எடுக்காத திமுகவும், அதன் தற்பொழுதைய செயல் தலைவர் ஸ்டாலினும் தற்பொழுது விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக தங்களது தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருப்பது கூட உண்மையில்லை.

இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT