இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம்: தரகர் சுகேஷுக்கு மே 12 வரை நீதிமன்ற காவல்!
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தரகராக செயல்பட்ட சுகேஷுக்கு ...
புதுதில்லி: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், தரகராக செயல்பட்ட சுகேஷுக்கு மே 12 வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் இருவரும் தில்லி காவல்துறையினரால் கடந்த 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல் துறையால் கடந்த 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு காவலில் விசாரிக்கப்பட்டு வந்த தரகர் சுகேஷ் சந்திரசேகரை குற்றப் பிரிவு தனிப் படையினர் தில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிபதி பூணம் சௌத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.அவரை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதிஅளித்திருந்தது.
Advertisement
அந்தஅனுமதி இன்றுடன் முடிவடைந்த நிலையில் சுகேஷுக்கு மே 12 வரை நீதிமன்ற காவல் விதித்து தில்லி நீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.