இன்று இரவு தில்லி அழைத்துச் செல்லப்படுகிறார் தினகரன்?
இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று தில்லி அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
சென்னை: இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று தில்லி அழைத்துச் செல்லப்பட உள்ளார்.
5 நாள் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள தினகரன், விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார், கடந்த 2 நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் தில்லி போலிசார் விசாரணை நடத்தி நிலையில், இன்று இரவு தினகரனும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனும் மீண்டும் தில்லி அழைத்துச் செல்லப்பட உள்ளதாகத தகவல்கள் தெரிவிக்கின்றன.