முகப்பு
தமிழ்நாடு

சசிகலாவிடம் ஆலோசனை: முதல்வர் பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ்

சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனைக் கேட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்கள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்ட

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:


மதுரை: சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனைக் கேட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்கள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து ஆலோசனை பெற்ற அமைச்சர்களையும், அவர்களைக் கண்டிக்காத முதல்வரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தாமரைக்கனி என்பவரின் மகன் ஆணழகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், செல்லூர்ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய 4 அமைச்சர்களும் சசிகலாவிடம் ஆலோசனை கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
நான்கு அமைச்சர்களையும் கண்டிக்காததால் முதல்வர் உட்பட5 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்வர் பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →