தமிழ்நாடு

வந்தது சம்மன்: மீண்டும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக... 

DIN

சென்னை: நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் விஜயபாஸ்கர். இவரது சென்னை மட்டும் புதுக்கோட்டை இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன.

அதன் தொடர்ச்சியாக அவர் நான்கு முறை நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் அவருக்கு வருமானவரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறை அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட  ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கும் சர்ச்சைக்குரிய  பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டிக்கும் இடையிலான பண பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT