தமிழ்நாடு

டிடிவி. தினகரனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 

திருவாரூர் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனிடமிருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தார்.

ஆர்.​ ​ தங்கராஜு

திருவாரூர்: அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனிடமிருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தார். 

திருவாரூரில் வரும் 19-ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதையொட்டி, வெள்ளிக்கிழமை பந்தல்கால் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நடத்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி மதுரை, திருப்பூர், திருவண்ணாமலையில் விழா நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்த மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிடிவி தினகரனிடமிருந்து அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வருவது குறித்து எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் மனஸ்தாபதங்கள் நீங்கி விரைவில் இணையும் என்றார் சீனிவாசன். நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT