முகப்பு
தமிழ்நாடு

துணை ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்வு: நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தில்லி பயணம்!

நாளை மறுநாள் நடக்க உள்ள துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி தில்லி செல்லவிருக்கிறார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

சென்னை: நாளை மறுநாள் நடக்க உள்ள துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, முதல்வர் பழனிசாமி தில்லி செல்லவிருக்கிறார்.

கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அமோக வெற்றி பெற்றார். அவரது பதவி ஏற்பு விழாவானது நாளை மறுநாள்(வியாழன்) அன்று நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தில்லி செல்ல உள்ளார்.

அவரது இந்த பயணத்தின் பொழுது பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு  விலக்கு கோருவது தொடர்பாக அவர் பிரதமரிடம் பேசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முழு கட்டுரையைப் படிக்க →