முகப்பு
தமிழ்நாடு

திருமலையில் நடிகர் கார்த்தி வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை நடிகர் கார்த்தி வியாழக்கிழமை வழிபட்டார்.

Updated On : 11 ஆகஸ்ட், 2017 at 10:25 AM
ஏழுமலையானை தரிசித்துவிட்டு, வெளியே வந்த நடிகர் கார்த்தி.
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:08 PM

திருப்பதி ஏழுமலையானை நடிகர் கார்த்தி வியாழக்கிழமை வழிபட்டார்.

ஏழுமலையான வழிபட நடிகர் கார்த்தி திருமலைக்கு புதன்கிழமை மாலை வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.

கோயிலை விட்டு வெளியே வந்த கார்த்தியைக் காண ரசிகர்கள் கோயில் முன் திரண்டனர். மேலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

Advertisement

2 ஆண்டுகளுக்கு பின்னர், திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துள்ளேன். நான் நடித்து வரும் 'காக்கி' என்ற படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. ஏழுமலையானைத் தரிசித்தது மன நிறைவைத் தருகிறது. ரசிகர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு, மதிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.