தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

DIN

புதுதில்லி: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவினை  அதிமுகவின் பொதுக் குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரிவினைத் தொடர்ந்து அதிமுக தற்பொழுது அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் தனக்கு என்று ஒரு தனி அணியினை உருவாக்கி செயல்பட்டு வருகிறார்.

தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று கூடி எடுத்துள்ள முடிவின் படி, டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைந்து செயல்படும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமயிலான அணியினைச் சேர்ந்த 'அஸ்பயர்;' சுவாமிநாதன், தேர்தல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு கடந்த எட்டாம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அளித்த பதிலானது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தாங்கள் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த பதிலானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT