தடம் மாறாமல் செல்லும் வரை பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பிரச்னை இல்லை: டிடிவி தினகரன்
தடம் மாறாமல் செல்லும் வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பிரச்னை இல்லை என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: தடம் மாறாமல் செல்லும் வரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பிரச்னை இல்லை என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுகவின் நன்மைக்காக எதையும் செய்யத் தயார். காவல்துறை அனுமதி மறுத்தாலும் மேலூரில் திட்டமிட்டபடி பொதுக் கூட்டம் நடப்பது உறுதி.
எடப்பாடி பழனிசாலை தலைமையில் நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால் தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களின் பதவி பறிபோகும்.
சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் பதவி செல்லுபடியாகும்போது துணைப் பொதுச் செயலாளர் பதவி ஏன் செல்லுபடியாகாது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
வசைபாடும் அரசியலை ஒருபோதும் மேற்கொள்ளமாட்டேன் என்று கூறிய டிடிவி தினகரன், திவாகரனை அரசியலில் சேர்ப்பது குறித்து சசிகலா தான் முடிவு செய்வார் என்றும் கூறினார்.
5 ஆண்டுகள் ஆட்சிநிலைக்குமா என்பதை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறிய அவர், 2021ம் ஆண்டும், அதிமுக தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தேவைப்படும்போது அறுவை சிகிச்சை செய்ய தயங்க மாட்டேன் என்றும் கூறினார் டிடிவி தினகரன்.