தமிழ்நாடு

தவறான அறுவைச் சிகிச்சையால் பெண் சாவு: அரசு மருத்துவர், செவிலியர் பணியிடை நீக்கம்

DIN

பெரம்பலூர் அருகே தவறான அறுவைச் சிகிச்சையால் பெண் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததாக, அரசு முதுநிலை உதவி மருத்துவர் மற்றும் மகப்பேறு உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இருவர் மீதும் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி மணிமேகலை (27). இவருக்கு, முத்தரசன் (2) மற்றும் 4 மாதக் குழந்தையான பேரரசன் ஆகியோர் உள்ளனர். பேரரசன் பிறந்தபோது பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மணிமேகலைக்கு மருத்துவர்களின் ஆலோசனைபடி கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாம்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்ற மணிமேகலை கடந்த 7 ஆம் தேதி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிமேகலையை பரிசோதித்த மருத்துவர்கள் கருத்தடை சாதனத்தை அகற்றி விட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்தனராம்.
இதனால், கடந்த 2 நாள்களாக மணிமேகலை சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மணிமேகலையை அவரது உறவினர்கள் பார்ப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் தவறான அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி, பெரம்பலூர்} துறையூர் சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் போலீஸôர் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில், முதுநிலை உதவி மருத்துவர் சூர்யபிரபா, மகப்பேறு உதவியாளர் ரமணி ஜீவா கேத்ரின் ஆகியோர் மீது பெரம்பலூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பணியிடை நீக்கம்: மேலும், கருத்தடை சாதனத்தை அகற்றும்போது தவறான சிகிச்சை அளித்ததாக, மருத்துவர், செவிலியர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நலப்பணிகள் இணை இயக்குநர் செல்வராஜன் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT