தமிழ்நாடு

பூந்தமல்லி அருகே கர்நாடக மாநில அரசு சொகுசுப் பேருந்தில் திடீர் தீ

சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக அரசு சொகுசு பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும்

DIN


சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக அரசு சொகுசு பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 45 பயணிகளுடன் சென்னை வந்துகொண்டிருந்து கர்நாடக அரசு சொகுசுப் பேருந்தின் பின்புறம் சென்னை பூந்தமல்லி அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்தது.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகள் அனைவரையும் கீழே இறங்கவும் அழைப்பு விடுத்ததுடன் பயணிகள் இறங்குவதற்கு தேவையான உதவிகளையும் செய்ததால் பயணிகள் உடனடியாக இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT