தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு தண்ணீர் திறப்பு நொடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 7,249 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சனிக்கிழமை காலை நொடிக்கு 8,150 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 41.04 அடியாக உயர்ந்தது. கடந்த சில தினங்களாக அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இது சனிக்கிழமை மாலை நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இதனால் நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 55 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. அணையின் நீர் இருப்பு 12.63 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT