தமிழ்நாடு

நதிநீர் இணைப்பு: விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

DIN

நதிநீர் இணைப்புக்கான நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தண்ணீர் பஞ்சம், வறட்சியால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை, கடன் சுமை காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டதால், விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது. இதற்கு ஒரே தீர்வு தேசிய அளவில் நதிகளை இணைப்பதுதான். மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் நதி நீர் இணைப்பிற்கான நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய அரசு ஒரு குழு அமைத்து, அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பான முறையில் திட்டத்தை வகுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT