தமிழ்நாடு

கடந்த எட்டு மாதங்களில் டெங்குவால் தமிழகத்தில் 15 பேர் பலி: தமிழக அரசு!

DIN

மதுரை: கடந்த எட்டு மாதங்களில் டெங்குவால் தமிழகத்தில் 15 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற  கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்ட் அமைக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலர் இன்று பதில் மனு ஓன்றினை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது.

ஜனவரி தொடங்கி தற்பொழுது ஆகஸ்ட் வரை கடந்த எட்டு மாதங்களில் டெங்குவால் தமிழகத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

டெங்குவினை பொறுத்தவரை கொசுக்களை முழுமையாக ஒழிக்க முடியாது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். மாவட்டவாரியாக மரணமடைந்தோர் விபரம் வருமாறு:

திருப்பூர்-4; ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் - தலா 3; நெல்லி, திருச்சி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் - தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் டெங்குவுக்கு பலியாகியுள்ளார்கள். இது தவிர பிற காய்ச்சல்களினால் 32 பேர், இந்த காலகட்டத்தினில் தமிழகத்தில் மரணமடைந்துள்ளனர்.

மேலும் மாநிலம் முழுவதும் 80 டெங்கு காய்ச்ச்சல் தடுப்பு மையங்கள் உண்டாக்கப்பட்டுள்ளன. அத்துடன் 770க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. அத்துடன் விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது  

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT