தமிழ்நாடு

மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை , அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை

DIN

மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை , அக்டோபர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனு:
மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் என்மீது ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் ஆய்வாளர் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தேன்.
மாநில மனித உரிமை ஆணையத்தில் கடந்த 7 மாதங்களாக உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் உள்ளது.
எனவே, மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர்கள் பதவிகளை அக்.30-ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT