தமிழ்நாடு

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும்: இரா.முத்தரசன் 

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். 

DIN

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
முதல்வர் பழனிசாமி உட்பட அனைவரும் சிறந்த நடிகர்களே, நாடகத்தை இயக்குவது மத்திய அரசு. ஆளும் கட்சியின் பலவீனத்தால் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளும் பறிபோகின்றன. 

போயஸ் தோட்ட இல்லம் மட்டுமின்றி ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும். எதிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு நீட் தீர்ப்பை மட்டும் மதிப்பது ஏன்?. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

44 ஆண்டுகளாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ணக் குவியல்... ஸ்ருதி லட்சுமி!

அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? பிஆர் கவாய் நேர்காணல்!

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிர்ப் பலிகள் 17 ஆக அதிகரிப்பு; 6 பேர் மாயம்!

பங்குச் சந்தை: 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! 26,200 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி!!

இந்திய அணியின் தோல்விக்கு யார் பொறுப்பு? கம்பீர் விளக்கம்!

SCROLL FOR NEXT