தமிழ்நாடு

'அதிமுகவில் இருந்து சசிகலா விரைவில் நீக்கப்படுவார்'

DIN


சென்னை: அதிமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இன்று ஒன்று சேர்ந்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது தொடர்பான அறிவிப்பும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவருமான வைத்திலிங்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இது குறித்தத் தகவலை வெளியிட்டார்.

அதாவது, கட்சியின் பொதுச் செயலரை நீக்குவது என்றால், கட்சியின் விதிப்படி பொதுக் குழுக் கூட்டித்தான் நீக்க வேண்டும். எனவே, விரைவில் அதிமுகவின் அவசரப் பொதுக் குழு கூட்டப்பட்டு, அந்த பொதுக் குழுவில் வி.கே. சசிகலாவை பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர், அணிகள் இணைப்புக்கான நிபந்தனைகளில், அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்க வேண்டும் என்பதைத்தான் முக்கிய நிபந்தனைகயாக முன் வைத்தனர்.  இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், விரைவில் பொதுச் செயலர் பதவியில் இருந்து வி.கே. சசிகலா நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT