தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தேர்தலில் வென்று மட்டும் என்ன செய்வீர்கள்? அரசியல்வாதிகளைச் சாடிய இயக்குநர் பா.ரஞ்சித்! 

DIN

சென்னை: மீனவர்கள் குடும்பங்கள் கண்ணீரில் காத்திருக்கும் பொழுது ஆர்.கே.நகர் தேர்தலில் வென்று மட்டும் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசியல்வாதிகளை இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

வங்கக் கடலில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ‘ஒக்கி’ புயல் தாக்கியது. அப்பொழுது குமரி மாவட்டத்தில் முறையான புயல் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாத காரணத்தால், அதற்கு முன்பே மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆழ்கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் புயலின் வேகத்தில் பல்வேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் அவர்கள் கரை சேர்ந்துள்ளனர். ஆனால் இன்னும் பெரும்பாலனோர் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்  கோரியும் அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்..

இந்த விவகாரத்தில் கேரள அரசு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசின் செயல்பாடுகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் பலரும் அங்குதான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித் கடுமையான விமர்சனத்தினை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் தெரிவித்துள்ளதாவது:

இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத எண்ணற்ற சகோதரர்களை எதிர்பார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா?  #ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்?

இவ்வாறு அவர் கடுமையாகத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT