தமிழ்நாடு

ஒக்கி புயலால் இறந்த மீனவர்களுக்கு உவரியில் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம்

DIN

ஒக்கி புயலால் இறந்த மீனவர்களுக்கு, திருநெல்வேலி மாவட்டம் உவரியில் கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும் கடலில் மலர் தூவியும் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி, உவரி அந்திரேயா ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் அடிகளார், துணை பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் தலைமையில், புயலால் இறந்த மீனவர்களுக்கு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலமாக கடற்கரைக்கு வந்தனர். அங்கு, புயலால் இறந்த மீனவர்களுக்கு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், கடலில் இறங்கி மலர் தூவி மெழுகுவர்த்திகளை விளக்குப்போல கடலில் மிதக்கவிட்டு அஞ்சலி செலுத்தினர். மெளன அஞ்சலி, ஊர்வலத்தில் உவரி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT